உலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து சுத்தமான நாடாக மாறிய நியூஸிலாந்து..!!

தென்மேற்கு பசிபிக் கடற் பகுதியில் இருக்கும் தீவான நியூஸிலாந்து நாட்டில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததார். இதனால், கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் கொரோனா வராது என நம்புவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓஸ்னியாவில் இருக்கும் குட்டி நாடான நியூஸிலாந்தையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அங்கு 1,500 பேர் பாதிக்கப்பட்டனர். 22 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், தீவு நாடாக இருப்பதால் அங்கு வரும் தங்கள் நாட்டு மக்களைத் தவிர சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். அவ்வாறு வருவோரையும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடையும் முன்பை பிரதமர் ஜெசிந்தா துணிச்சலாக நடவடிக்கை எடுத்து எல்லைகளை மூடினார். தங்கள் நாட்டு மக்களைத் தவிர பிறநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அந்நாட்டு மக்கள் வந்தாலும், 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருந்து அதன்பின் பரிசோதனைக்கு பின்பு நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் நியூஸிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் முழுமையாக வெளியேறிய சூழல் வந்த கடந்த 20 நாட்களுக்கு முன் ஒருவர் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளித்த நிலையில் அவரும் நேற்று குணமடைந்தார். அதாவது நியூஸிலாந்தில் கடைசிக் கொரோனா நோயாளியும் நேற்று கொரோனா வைரஸ் இல்லாத சுத்தமான நாடாக நியூஸிலாந்து மாறியது.இதுகுறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஊடகங்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் ‘நியூஸிலாந்தில் கடந்த 17 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளி குணமடைந்துவிட்டார். கடந்த 17 நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.ஆதலால், நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்காக அடுத்த கட்ட தளர்வுகளை இன்று அமைச்சரவை கூடி ஆலோசித்து அறிவிக்கும். நியூஸிலாந்திலிருந்து கொரோனா வைரஸை ஒழித்து விட்டோம் என நம்புகிறோம்.மீண்டும் வைரஸ் இங்கு வந்தால் நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் அல்ல, வைரஸ் பாதிப்பு என்றால் மீண்டும் வரத்தான் செய்யும். ஆதலால், தொடர்ந்து கொரோனா வராவிடால் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.நாட்டிலிருந்து கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு காரணிகள் துணைபுரி்ந்துள்ளன என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பொருளாதார நடவடிக்கையை வேகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டினர் அனைவரும் தனிமைப்படுத்தும் பணி தொடரும் என்பதில் மாற்றமில்லை’ எனவும் தெரிவித்தார்.