தொடர்ச்சியாக மறுக்கப்படும் முக்கிய கோரிக்கை! மனவிரக்தியில் சிறையில் முருகன் எடுத்துள்ள தீர்மானம்.!!

நளினி மற்றும் முருகன் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் வட்ஸ்அப் வீடியோ கோலில் பேச அனுமதி மறுக்கப்படுவதால் மன விரக்தியடைந்துள்ள முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.முருகன் தனது மனைவி நளினி மற்றும் லண்டனில் உள்ள மகள், இலங்கையில் உள்ள தாயாரிடம் வட்ஸ்அப் வீடியோ கோலில் பேச அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த நிலையில் சிறையில் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக்கோரி முருகன் கடந்த 1ஆம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும், வீடியோ அழைப்பில் பேச அனுமதி மறுக்கப்படுவதால் மன விரக்தியடைந்துள்ள அவர் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சிறை வளாகத்திலேயே முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும், தினமும் அவர் குறிப்பிட்ட நேரம் மட்டும் பழங்களை மட்டும் உட்கொள்கிறார் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.