சகல செல்வங்களையும் அருளும் பங்குனி திங்கள் விரதத்தின் மகிமை..!!

பங்குனிதிங்கள் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று. இந் நன்னாளில் அம்மனிற்கு விசேட அபிக்ஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தில் வெகுவிமரிசையாக பொங்கல் திருவிழா இடம்பெறும்.யாழ் குடா நாட்டில் உள்ள மக்கள் மட்டும் அல்லாமல் வேறுபகுதிகளிலும் உள்ள மக்கள் இவ்வாலயத்திற்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை ஆலயத்திலும் அம்மனிற்கு சிறப்பான அபிக்ஷேக ஆராதனைகள் இடம்பெறும்.பங்குனி திங்களில் பெண்கள் அம்மனை நினைத்து நோன்பிருந்து அபிராமி அந்தாதி போன்ற அம்மனிற்குரிய பக்திப்பாடல்களை மறு நாள் உதயத்திற்கு முன் பாராயணம் செய்வது நல்லது.இதனால் சகல சௌபாக்கியங்களையும் பெண்கள் பெறுவார்கள்.

இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். குறிப்பாக அம்மன் ஆலயங்களில் பங்குனி மாதம் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.அன்றைய தினம் பெண்கள் நோன்பிருந்து அபிராமி, அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பாராயணம் செய்தால் நல்லது. இப்படிச் செய்தால் சகல செல்வங்களும் பெற்று வாழ்வர்.உத்திரத்தன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். ஆலயம் சென்று சிவனை வணங்கினால் பெண்களுக்கு மாங்கல்ய நலம் வரும். கணவர்களின் துன்பம், நீங்காத நோய்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி குதூகலம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த கசப்புகள் நீங்கி அன்பு வளரும்.