மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…15 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!!

யாழ்.கொடிகாமம், வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெனிஸ்ரன், வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதென பொலிஸார் குறிப்பிட்ட போதிலும், தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.