ஆட்கள் எவரும் இல்லாத நேரம் வீடு உடைத்து உடைத்துக் கொள்ளை..!! யாழ் நல்லூரில் பயங்கரம்.!!

யாழ்.நல்லுார் சங்கிலியன் வீதியில் வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கிருந்து பெருமளவு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றிவருகின்றார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மன்னாருக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய நிலையில் வீடு உடைக்கப்பட்டு களவாடப்பட்டமை தொியவந்திருக்கின்றது. இதன்போது வீட்டில் இருந்ததோடு மோதிரம், பென்ரன் உள்ளிட்ட இரு பவுண் தங்க நகைகளும், கைத்தொலைபேசி என்பனவும் களவாடப்பட்டுள்ளது.குறித்த களவு தொடர்பில் சனிக்கிழமை மாலையில் குறித்த அதிபரால் அதிபரால் யாழ்ப்பாணம் பொலிசாரால் முறையிடப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாட்டினையடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தடையவியல் பொலிசார் அதிபரின் இல்லத்தில் தடயங்களைப் பெற்றதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.