யாழ். மானிப்பாயில் திடீர் சுற்றி வளைப்பு…65வயதுப் பெண் உட்பட இருவர் கைது..!!

அரச விடுமுறை நாளில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற உத்தியோகத்தர் இருவர் பணம் கொடுத்து மதுபானத்தை வாங்கிய பின்னர், அவ்விடத்தை சுற்றிவளைத்து இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.இதில் 65 வயதுடைய பெண் ஒருவரும் 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.