சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் கொழும்பு மாநகரத் தெருக்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள்..!! அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால், பலர் தமது சொந்த இடங்களிற்கு திரும்ப முடியாமல் அந்தரித்து வருகிறார்கள்.தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தலைநகர் கொழும்பில் வீதியோரங்களிலும், கோட்டை புகையிரத நிலையத்திலும் பல மலையக இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள்.

உணவு, இருப்பிடம் இல்லாமல் அவர்கள் வீதியோரம் தங்கியிருக்கும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. ஆங்காங்கே சில தன்னார்வலர்கள் அவர்களிற்கு உணவளித்து வந்தாலும், அவர்களின் உணவுத் தேவைக்கு நிச்சயமான ஏற்பாடு எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
அதேபோல, வடக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் திண்டாடி வருகிறார்கள்.வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்று வீடு திரும்ப முடியாதவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளும்படி (0777781891) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு விடுத்துள்ளார்.இதேவேளை, மேல் மாகாணத்தில் மாட்டியுள்ளவர்கள் ஊர்திரும்ப விரும்புபவர்கள் 011 – 2441147 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஊர்திரும்ப முடியாதவர்கள் தொடர்பாக அடுத்த கட்டமாக எடுக்கப்படும் நிலைமை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று காலை தொடர்பு கொண்டு வினவியது.வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ள ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தமது விபரங்களை தனக்கு அனுப்பியுள்ளதாகவும், அவற்றை திரட்டி நாளை மறுநாள் புதன்கிழமை அமைச்சரவையில் இந்த விபரங்களை சமர்ப்பித்து, இது தொடர்பில் தெளிவான ஏற்பாடொன்றை செய்வதாக தெரிவித்துள்ளார்.