இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மூன்றாம் இணைப்பு
இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் இதுவரை 1833 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 50 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் இதுவரை 1819 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும், 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.முதலாம் இணைப்பு-இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் இதுவரை 1819 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 50 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 941 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 864 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.