பொதுப் போக்குவரத்து தொடர்பில் சற்று முன்னர் வெளியான இறுதி முடிவு!!

கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளை சுகாதார விதி முறைகளுக்கமைய, நாளைய தினம் முழுமையான ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இன்று மாலை இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்திருந்த நிலையில் முழு நாடும் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுமையாக மீண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.