இலங்கையில் இன்று நடந்த தேர்தல் ஒத்திகை..!! திரண்டு வந்து வாக்களித்த பொதுமக்கள்..!

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட பிரதேச செயலக பிரிவில் தேரிவுசெய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இன்று (07) தேர்தல் ஒத்திகை நடைபெற்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, புதிய நடைமுறையில் தேர்தலை நடத்துவதற்கான ஒத்திகையாக இந்த மாதிரி தேர்தல் அமைந்துள்ளது.சுகாதார வழிகாட்டுதல்களிற்கமைவான புதிய முறையின் கீழ், ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அறிந்து கொள்வதும், எழும் நடைமுறை சிக்கல்களை அடையாளம் காண்பதும் இதன் நோக்கமாகும். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 12 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதன்போது 200 பேர் வாக்களிக்க ஏற்பாடாகியிருந்தது.