யாழில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று : வைத்தியர் த. சத்தியமூர்த்தி

யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


நாளாந்த கொரோனா புள்ளிவிபரம் குறித்து வெளியிடுகையிலேயே இதை தெரிவித்தார்.நேற்று 64 பேருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவருக்கே இவ்வாறு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.