யாழ்ப்பாணத்தில் இயற்கைவழியில் வீட்டுதோட்டம் அமைத்து சாதித்துவரும் மென்பொருளியலாளர்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த மென்பொருளியலாளரான வகீதரன் சிவசுப்ரமணியம் அவர்கள் தனது வீட்டிலுள்ள தரிசு நிலத்திலும் மொட்டை மாடியிலும் வீட்டுதோட்டம் அமைத்து அமைத்து வெற்றிகரமாக பராமரித்து வருகிறார். இதன் மூலம் நஞ்சில்லா காய்கறிகளை தமது குடும்பத்துக்கும் அயலவர்களுக்கும் வழங்கி வருகிறார். இவருடைய தோட்டத்தில் கத்தரி மிளகாய் வெண்டி பூசணி தக்காளி பாகல் புடோல் சோளம் இஞ்சி வல்லாரை பயிற்றை என பலவகையான பயிர்களை பயிரிட்டுள்ளார். இவற்றுக்கு பசளையாக ஆட்டெரு வீட்டிலுள்ள உக்கிய தாவர கழிவுகள் என்பவற்றை பயன்படுத்துகிறார்.


இதைவிட அவற்றிற்கு சொட்டுநீர்பாசனமுறையில் நீர்ப்பாசன அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாவரங்கள் சிறப்பான வளர்ச்சியையும்இ நீர் முகாமைத்துவதையும் செயற்படுத்த முடிகிறது .
இதைவிட கொடித்தோடை போன்ற தாவரங்களுக்கு ஆராய்ச்சி முறையில் 5ட வெற்று போத்தலில் இயற்கை பாசியை வளரவிட்டு அந்த தண்ணீரை சொட்டுநீர்ப்பாசன முறையில் வழங்குகிறார். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிப்பதுபோல் ஒரே இயற்கை முறையில் தாவரத்துக்கு தண்ணீரையும் ஊட்டசத்தையும் வழங்க முடிவது இதன் சிறப்பம்சமாகும்.[/caption]

உண்மையில் யாழ்ப்பாணத்தில் பல மொட்டை மாடிகள் வெறும் தரையாகவே காணபடுகின்றன.ஒரு சிலரே அவற்றை முழுமையாக பயன்படுத்த முனைகின்றனர். அவற்றுள் வகீதரனும் ஒருவர். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாகவும் செலவு குறைந்த முறையிலும் காணப்படும் மொட்டை மாடி வீட்டுதோட்ட முறையைஇ நாங்கள் அனைத்து வசதிகள் இருந்தும் விழிப்புணர்வு இல்லாமல் இதை அமுல்படுத்தாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.[/caption]

ஒருகால கட்டத்தில் மலேசியாவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்த சிங்கப்பூர் இன்று வணிகரீதியாக மொட்டை மாடி தோட்டங்கள் அமைத்து தற்போது அது மலேசியாவிற்கு தக்காளியை ஏற்றுமதி செய்கின்றது.நாங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் இ எம்மை சூழ்ந்துள்ள மனஅழுத்தங்களில் இருந்து விடுபடவும் வீட்டு முற்றத்தில் பயன்தரா பூங்கன்றுகளை நடுவதை விடுத்து பயன்தரு காய்கறி மரங்களை நாடுவதே சரியான தீர்வாகும் .

நாங்கள் இன்று வீடுகளை சுற்றி மதில்களை அமைத்து இயற்கை சமநிலையை குழப்பியுள்ளோம். ஆனல் சிங்கள மக்கள் தமது வேலிகளில் பயன்தரு மரங்களை நட்டும்இ வீட்டுதோட்டங்களை சரியாக நிர்வகித்தும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் . நாங்கள் ஆடம்பரம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இனி வரும் காலங்களில் எமது நண்பர்களின் மற்றும் உறவினர்களின் பிறந்தநாள் விழாக்கள் சிறிய நிகழ்வுகள் என்பவற்றிற்கு எமது வீட்டுதோட்டங்களில் விளைந்த நஞ்சற்ற காய்கறிகள் பழ வகைகள் என்பவற்றை பரிசளிப்பதே மிகச்சிறந்த பரிசாக அமையும்.இவ்வாறு பலவிடயங்களை கலந்துரையாடிய பின் விடைபெற்றோம் .