முதியவரை தள்ளிவிட்டு மண்டை உடைத்த விவகாரம்..!கூண்டோடு ராஜினாமா செய்த 57 பொலிசார்

அமெரிக்காவில் முதியவர் ஒருவரை தள்ளிவிட்டு மண்டை உடைய காரணமான இரு பொலிசார் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக பொலிசார் 57 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.அமெரிக்காவின் Buffalo பகுதியில் கலவர தடுப்பு பொலிசார் குழு ஒன்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.


அப்போது அவர்களிடம் கேள்வி எழுப்பிய 75 வயது முதியவர் ஒருவரை சில பொலிசார் மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து, அதில் அவரது மண்டை உடைந்தது.இந்த விவகாரம் பூதாகரமாக உருமாறிய நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய இரு பொலிசார் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.அந்த பொலிசார் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு Buffalo கலவர தடுப்பு பொலிசார் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதன் ஒருபகுதியாக Buffalo கலவர தடுப்பு பொலிசார் குழுவில் மொத்தமுள்ள 57 பேரும் தங்கள் பொறுப்புகளில் இருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.இதனிடையே மண்டை உடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் அந்த முதியவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.