விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
உரும்பிராய் சந்தியில் அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், மக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை உரும்பிராய் வேப்பம்பிராய் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் நினைவிடம் மற்றும் உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முன்னர் வந்த செய்தி…