உங்களுக்கு முதுகு வலி அதிகமா? இப்படிச் செய்தால் முதுகுவலி இல்லாமல் போயிடுமாம்..!! அவசியம் படியுங்கள்..!

தற்போது எல்லோரும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மடிக்கணினி முன் நாட்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியுள்ளது. இந்த வொர்க் ப்ரம் ஹோமால் நிறைய நன்மைகள் இருந்தால் கூட நிறைய உடல் உபாதைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று முதுகு வலி.

பொதுவாக உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பவர்கள் இந்த முதுகு வலி பிரச்சினையை சந்தித்து வருவதாக புகார் அளித்து வருகின்றனர். இதனால் தங்கள் அன்றாட வேலைகளும் பாதித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த முதுவலியால் இரவில் சரியாக தூங்க முடிவதில்லை, என் உடல் தோரணையை மாறி விட்டது போன்று தோன்றுகிறது என்றெல்லாம் கூறுபவர்களும் உண்டு. நிறைய பேர்கள் இந்த முதுகுவலியை தாங்கிக் கொள்ள முடியாமல் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் காலப்போக்கில் நிறைய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே இந்த முதுகுவலியை எப்படி சமாளிப்பது, இதற்கு வலி நிவாரணிகளைத் தவிர சில சிகிச்சை முறைகளும் உள்ளன. முதுகின் எந்த பகுதியில் வலி இருந்தால் கூட வீட்டை சுத்தம் செய்வது போன்ற அன்றாட வீட்டு வேலைகளைக் கூட நீங்கள் செய்ய முடியாமல் தவித்தால், அதற்கு இந்த 4 சிகிச்சை முறைகள் உதவியாக இருக்கும். இது உங்களுக்கு முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

இது மிகவும் பயனுள்ள மற்றும் பரிசோதிக்கப்பட்ட முறைகளுள் ஒன்று. சீன மருத்துவத்தின் படி இந்த அக்குபஞ்சர் முறை செய்யப்படுகிறது. நம் உடலில் மொத்தம் 365 ஆற்றல் புள்ளிகள் உள்ளன. இந்த ஆற்றல் புள்ளிகளின் மீது நோயைப் பொருத்து ஒவ்வொரு புள்ளிகளிலும் அழுத்தத்தை கொடுப்பது தான் அக்குபஞ்சர் முறையாகும். உலக சுகாதார அமைப்பும் அக்குபஞ்சர் முறை வலிகளுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளது. கடுமையான முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்களும் கூறியுள்ளனர்.

சிரோபிராக்டிக் சிகிச்சை என்பது எந்தவொரு அறுவை சிகிச்சை இல்லாமல் நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கூட்டு அமைப்புகள் தொடர்பான வலிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள். அவர்கள் சில கட்டுப்படுத்தப்பட்ட கையேடு அசைவுகள் மூலம் முதுகுவலிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். வலியின் தீவிரத்தை அறிந்து கொள்ளுதல், வலிக்கு சிகிச்சை அளித்தல், நோயாளிகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதே இந்த சிரோபிராக்டிக் சிகிச்சையின் முக்கிய பங்காகும். இந்த சிகிச்சையை வழக்கமான மருந்துகளுடன் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்து கொள்ளலாம்.

முதுகு வலியில் இருந்து விடுபட உங்களுக்கு பைலேட்டுகள் உதவியாக இருக்கும். முதுகு தசைகளை வலுப்படுத்த பைலேட்ஸ் மிகவும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும். தன்னுடைய காயமடைந்த போர் வீரர்களுக்காக முதலாம் உலகப் போரில் ஜோசப் பைலேட்ஸ் இந்த சிகிச்சையை கண்டறிந்தார். இந்த சிகிச்சையின் மூலம் பின்புற தசைகளை வலுப்படுத்த முடிந்தது. இந்த உடற்பயிற்சி முக்கியமான மைய தசைகளை குறி வைத்து நிவாரணம் அளிக்கிறது. சுவாசக் கோளாறுகளுடன் போராடுபவர்களும் சுவாசத்தைக் கடைப்பிடிக்க இது உதவுகிறது. பைலேட்ஸ் சிகிச்சையில் ஏராளமான இயக்கங்கள் மேற்கொள்ளப்படுவதால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சிறந்த தோரணை மற்றும் குறைந்த அழுத்த தசைகளுக்கு வழி வகுக்கிறது.

வைட்டமின்கள் தான் நாம் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகிறது. பலவீனமான எலும்புகள் அல்லது மூட்டுகள் மற்றும் தொடர்ச்சியான முதுகு வலி போன்றவை வைட்டமின் குறைபாட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம். வைட்டமின் டி குறைப்பாட்டால் கூட உங்களுக்கு முதுகுவலி நேர வாய்ப்பு உள்ளது. வைட்டமின் டி சத்து நம் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் அத்தியாவசியமான ஒன்று. இதை சூரியனிடம் இருந்து நாம் பெற முடியும். ஆனால் நவீன காலத்தில் யாரும் வீட்டை விட்டுக் கூட வெளியே போவதில்லை என்பதால் சூரியனிடம் இருந்து வைட்டமின் டி பெறுவது குறைவாக உள்ளது. இதனால் கூட நிறைய பேருக்கு முதுகுவலி, மூட்டுவலி பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் முதலில் அதை நிவர்த்தி செய்யுங்கள். அதுவே முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவியாக இருக்கும்.