இலங்கையில் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்கள்..!!

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 8 பேர் தொடர்பான தகவல்களை சுகாதார துறை பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.நாட்டில் உறுதி செய்யப்பட்ட கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றிரவு வரை 176 வரை அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரையில் புதிதாக 12 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய நபர் மாத்தறை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொரோனா நோயாளி ஒருவருடன் நெருக்கமாக செற்பட்டுள்ளார்.கொழும்பு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவர் அவர்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. மற்றைய நபர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவராகும்.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களில் நேற்று நால்வர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய இதுவரையில் 33 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.