சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் மயங்கி வீழ்ந்து திடீர் மரணம்.!!

வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் யாழ்.அச்சுவேலி சுதேச மருந்து உற்பத்திப் பிரிவில் கடமையாற்றி பெண் ஒருவர் அலுவலகத்தில் கடமையில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை அலுவலக மலசல கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த குறித்த பெண் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த இளம் யுவதி கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.