பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது அதற்கு பின்னர் ஒரு தினத்தில் நடத்த நேரிடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிந்தளவில் விரைவில் தேர்தலுக்கு சென்று எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவை ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இருந்தாலும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க குறிப்பிடத்தக்க காலம் தேவை என்பதால் தேர்தல் நடத்தப்படும் தினம் மேலும் தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.பொதுத் தேர்தலை நடத்தும் தினத்தை தீர்மானிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.