உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் திகதி அறிவிக்கப்படும் தினத்தன்று பரீட்சைகள் தொடர்பான திகதிகளும் அறிவிக்கப்படுமென நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரச தரப்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
363,278 மாணவர்கள் உயர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இந்த மாத இறுதியில் பாடசாலைகளை திறப்பதற்கு அதிக வாய்ப்பகள் உள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் அதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.