திருமணத்திற்கு சில காலங்களே இருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண்..!!

மொனராகலையில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபில மெதகம, நன்னபுராவ, திவியாபொல பிரதேசத்தை சேர்ந்த சத்துரி அஞ்சலி பாலசந்திர என்ற 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்தப் பெண்ணின் தந்தை சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது தாயார் கொழும்பு பிரதேசத்தில் தொழில் செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பெண் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.உயிரிழந்த பெண் கடந்த 28ஆம் திகதி அவர் திருமணம் செய்யவிருந்த இளைஞனுடன் கொழும்பில் இருந்து மெதகம வீட்டிற்கு சென்றுள்ளனர்.


அந்த இளைஞன் கடந்த முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழப்பிற்கான காரணம் இன்னமும் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.