இலங்கையிலும் மிகப்பிரகாசமான ஒளியோடு மிளிர்ந்தது சந்திர கிரகணம்..!! பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள்..!!

இவ்வருடத்திற்கான சந்திர கிரகணம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பிரகாசமாக தென்பட்டுள்ளது.

குறித்த கிரகணமானது இரவு 11.15 மணியளவில் ஆரம்பிக்குமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்திருந்தார்.இதற்கமைய அதிகாலை 02.34 மணிக்கு கிரகணம் நீடித்திருந்ததுடன் சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடம்பெற்றிருந்தது.சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல் பூமியை மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.