2000 கிமீ நடந்தே வீட்டுக்கு வந்த பாச மகன்..! கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

2000 கிலோமீட்டர் நடந்து வீட்டுக்கு வந்த புலம்பெயர் தொழிலாளியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் கான் (23) என்ற இளைஞர் பெங்களூரில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார்.தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் வேலை இல்லாமல் தனது நண்பர்களுடன் 12 நாட்களில் சுமார் 2000 கிலோமீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்துள்ளார்.நீண்ட நாள்களுக்கு பிறகு மகனை சந்தித்த மகிழ்ச்சியில் சல்மான் கானின் தாய் கண்ணீர் மல்க கட்டி அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.ஆனால், அவருக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நடந்த வந்த களைப்பில் இருந்த சல்மான் கான் வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோப்பில் கை, கால்களை கழுவுவதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை.இதனால், சந்தேகமடைந்த அவரது தாய் கரும்பு தோப்புக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகனை பாம்பு கடித்து இறந்து கிடப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவரும் அங்கே மயங்கி விழுந்துள்ளார். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.