வழமைக்குத் திரும்பியது இலங்கை..!! ஊரடங்கு உத்தரவும் தளர்வு.!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 3ம் திகதி இரவு 10 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில்,மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் 8ம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.