12 வருட ஏக்கத்துடன் 1,204 நாளாக வீதியில் போராட்டம் நடத்தி மகனைக் காணாமலேயே உயிரிழந்த தந்தை !!

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 12 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (5) காலை மரணமடைந்துள்ளார்.

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (71) என்ற தந்தையே இன்று மரணமானார். தனது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து மரணமானார்.வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் இவர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது மகனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச் சென்றிருந்தனர்.இந்நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு, காணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.