உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட தீவு!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒரேயொரு தீவு மாத்திரம் குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பியுள்ளது.பசுபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள இந்தத் தீவானது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தாம் விடுபட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. அங்கு இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரும் பூரண குணமடைந்ததை தொடர்ந்தே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு மொத்தமாக ஒன்பது இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்து வருவதோடு, அங்கு முதலாவது கொரோனா தொற்றாளர் கடந்த மார்ச் மாதத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.அந்நாட்டில் மொத்தமாக 18 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த 45 நாட்களாக அடங்கு எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.பிஜீ தீவில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக எந்தவொரு உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.