இலங்கைக்குள் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் மூன்றால் உயர்ந்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த தொகை 166 ஆக இருந்தது. இன்றைய தினத்தில் மாத்திரம் 8 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்த நிலையில், வீடுகளுக்கு சென்றுள்ளதாக அரச தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.