கூட்டமாக வந்து பயிர்களை அழிக்கும் திண்ணைக் குருவிகள்.!! கிளிநொச்சியில் குருவிகளுடன் போராடும் பொதுமக்கள்!!

கொரோனா எனும் வைரஸிடமிருந்து எமது நாட்டு மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒருபுறம் பாலைவன வெட்டுக்கிளி விவசாய நிலங்களை தாக்கி வருகின்றது. இந்த வேளையில் தற்போது கிளிநொச்சியில் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முக்கொம்பன் சின்ன பல்லவராயன்கட்டு பகுதியில் உள்ளே நெற்பயிர்ச்செய்கை செய்யும் விவசாய்களின் நெற்கதிர்களை திண்ணை குருவிகள் கூட்டம் கூட்டமாக நெல் வயல்களை நாசமாக்கி வருகின்றது.இதன்போது கருத்து தெரிவித்த விவசாயிகள்,அதிகாலை 05.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திண்ணை குருவிகளிடம் போராடி வருகின்றோம். அதிகாலை வயல் நிலங்களுக்கு சென்று ஓசைகள், சத்த வெடிகள் மூலம் இந்தக் குருவிகளை விரட்டினாலும் அகன்று செல்வதில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.