27 லீற்றர் கசிப்புடன் யாழில் அதிரடியாக மாட்டிய கோயில் பூசகர்..!!

யாழ்.தெல்லிப்பழையில் 27 லீற்றர் கசிப்பை வீட்டுக்குள் மறைத்துவைத்திருந்த பூசகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.


ஏழாலையைச் சேர்ந்த குறித்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காங்கேசன்துறை பிராந்திய பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட பூசகர் இதே குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒரு தடவை கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.