திருமணம் முடித்து 10 நாட்களில் 2வது மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்த கொடூரக் கணவன்.!!

திருமணமான சில நாட்களிலேயே மனைவியின் கழுத்தை கயிற்றால் திருகி கொன்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (03) மாலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.ஏறாவூர் ஐயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பத்து நாட்களின் முன்னர் திருமணம் முடித்த இளம் குடும்பமான கணவன் – மனைவிக்கிடையே சம்பவதினமான நேற்று புதன்கிழமை (03) பிற்பகல் சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், மனைவியின் கழுத்தை கணவன் கயிற்றால் திருகியதனால் மனைவி உயிரிழந்துள்ளர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து 27 வயதுடைய கணவனை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கணவன் தென்பகுதியை சேர்ந்தவர்.ஏற்கனவே திருமணம் செய்தவர், குற்றச்செயல் ஒன்றிற்காக சிறையில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.