எதிர்வரும் 7 ஆம் திகதி பொதுத் தேர்தல் ஒத்திகை.!! தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் வாக்களிப்பு.!

தெரிவு செய்யப்பட்ட கிராமம் ஒன்றில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பரீட்சார்த்த தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரொனா பரவலின் பின்னரான புதிய சுகாதார நடைமுறைகளுடன் கூடிய பரீட்சார்த்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.இதற்காக கிராமமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுத் தேர்தல் வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் 8ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு முன்னர் தெரிவு செய்யப்படட கிராமங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.