கொவிட்- 19 – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஐசிஆர்சி..!!

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும், சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து அவசர நிவாரண உதவிகளை வழங்கிவருகிறது.


இந்த நிவாரண உதவிகள் கொரோனா காரணமாக சமூகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகின்றன.கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.இதுவரை 1500 குடும்பங்களுக்கு உணவு நிவாரணங்களும் 5700 ரூபா பணக்கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.உணவு நிவாரணத்தின்கீழ் அரிசி சீனி, உப்பு, கோதுமா மா, உட்பட்ட பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.