இந்த மாதத்தில் நிகழப் போகும் மாயாஜாலம்..!! பார்ப்பதற்கு தயாரா நீங்கள்.?

இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை வைத்து ஒரு கடித்தது போல நிழல் மறைத்திருக்கும்.அதனால்தான், இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்பிரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் எனப் பெயர் வைத்துள்ளனர். வானவியலின் அடிப்படையில்தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும், கிரகணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது.ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது.எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஆண்டுக்கு சில பௌர்ணமி அமாவாசை நாட்களில்தான் கிரகணங்கள் உண்டாகின்றன.வானவியலின் அடிப்படையில் சந்திரகிரகணம் என்பது சூரிய ஒளியால் ஏற்படும் பூமியும் நிழலிற்குள் சந்திரன் கடக்கும் போது நிகழ்கிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் போது மட்டும் நிகழ்கிறது.எனவே பௌர்ணமி நாளில் மட்டுமே சந்திர கிரகணம் நிகழ்கிறது.இந்த முறை நிகழும் கிரகணம் சற்றே வித்தியாசமானது. அதாவது மிதுனம் ராசியில் ராகு சூரியன் நிற்க, சந்திரன் விருச்சிகம் ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் பயணிக்கிறார்.இம்முறை சூரியன் சந்திரன் ராகு கேது ஒரே நேர்கோட்டில் இருக்காமல் சற்றே விலகி இருக்கிறது. இது புறநிழல் சந்திர கிரகணம் ஆக அதாவது பெனும்பிரல் மூன் எக்லிப்ஸ் ஆக நிகழ்கிறது.சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு:பொதுவாகவே சந்திரகிரகணம் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்கின்றனர். நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும், அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.

முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் கரு நிழலிற்குள் சந்திரன் கடந்து செல்லும் போது ஏற்படும் இது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வு. அப்போது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி முற்றிலும் தடுக்கிறது. இது வானத்தில் நிகழும் அதிசய நிகழ்வு. கடந்த 2018ஆம் ஆண்டில் ப்ளட் மூன், ரெட் மூன், சூப்பர் மூன் என பல சந்திரகிரகணத்தின் மூலம் பல அதிசயங்களை வானில் பார்க்க முடிந்தது.பெனும்பிரல் சந்திர கிரகணம்:பகுதி சந்திரகிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பாதியளவு நேர்கோடாக வந்தால் பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ்கிறது.
புற நிழல் நிலவு மறைப்பு என்பது பூமியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் மேற்பகுதி இருண்டு இருக்கும். பூமியின் புறநிழல் வழியாக சந்திரன் முழுமையாக கடந்து செல்வது அரிதாகவே இருக்கும். இந்த நிகழ்வின் போது கருநிழலுக்கு மிகவும் அருகில் இருக்கும் நிலவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருண்டு காணப்படும்.ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் எப்போது:முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணத்தை நேரடியாக கண்களால் பார்த்து தெளிவாக புரிந்து கொள்ளலாம். புற நிழல் சந்திர கிரகணத்தை உற்று நோக்கித்தான் உணர்ந்து கொள்ள முடியும். இந்த சந்திர கிரகணத்தை பார்ப்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த மாதத்தில் ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதி களில் நிகழப்போகும் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

வானில் நிகழும் அதிசயம்:அமெரிக்காவில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலம். சந்திரன் உதிக்கும் போதும் மறையும் போதும் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரியும் புறநிழல் சந்திர கிரகணம் நிகழும் போது நிலவின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்பட்டு தனி அழகை ஏற்படும். வரும் வெள்ளிக்கிழமை இந்த வானியல் அதிசயத்தை காணலாம்.ஸ்ட்ராபெர்ரி சந்திரகிரகணம்:2020ஆம் ஆண்டில் நான்கு பெனம்பிரல் சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் நாசா அறிவித்திருந்தது. அதன்படி 2020ஆம் ஆண்டு பிறந்த உடன் ஜனவரி 10ஆம் திகதி ஓநாய் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை.ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ் சந்திர கிரகணமானது ஜூன் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 11:15 மணிக்கு ஆரம்பித்து ஜூன் 6 திகதி சனிக்கிழமை அதிகாலை 2:34 மணி வரை நீடிக்கிறது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆகும்.எங்கெங்கு தெரியும்? யாரால் பார்க்க முடியும்..?
இந்தியாவில் சந்திர கிரகணத்தினை முழுமையாக பார்க்க முடியாது என்பது இந்தியர்களுக்கு வேதனைக்குரிய விடயமே.ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது நிகழும் போது சந்திரனின் 57சதவிகிதம் பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது. இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இன்னும் எத்தனை கிரகணங்கள்:இந்த நிலையில் ராகு உடன் சூரியன் சந்திரன் சேர்ந்திருக்கும் போது நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரகஸ்த சூரிய கிரகணமாகும் வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.16 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.03 மணிவரை நீடிக்கிறது.இந்த ஆண்டில் மேலும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழப்போகின்றன.ஜூலை 5, நவம்பர் 30ஆம் திகதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இந்தச் சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது.அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.