அண்ணன் பேசிய ஆசைவார்த்தையில் மயங்கிய தங்கை.!! விளைவு..?மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி வழக்கில், அவரது அண்ணன் முறையான கல்லூரி மாணவர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வயிற்றுவலி காரணமாக 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான சிறுமி ஒருவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிறுமி மற்றும் அவரது தாயாரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் பரசேரியை அடுத்த மணக்கரை கிராமத்தை சேர்ந்த சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் அண்ணன் முறையான 19 வயதான வாலிபருடன் பழகிவந்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரியில் வரலாறு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சஞ்ஜீவ் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று சுத்தியுள்ளனர் மேலும், அவர்கள் இருக்கவரும் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் இந்த காதல் சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளதுள்ளனர். ஆனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் பழகி வந்துள்ளனர்.இதையடுத்து, சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, சஞ்ஜீவ் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளதாக தெரிகிறது.தற்போது சிறுமி கர்ப்பமடைந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, கருக்கலைப்பு செய்ய பரசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். விஷயம் அறிந்த மருத்துவமனை அவர்களை, ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.குளச்சல் அனைத்து மகளிர் காவல் போலீசார் 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமாக கல்லூரி மாணவர் சஞ்ஜீவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சிறுமியின் தாயாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கர்ப்பமடைந்த மாணவி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.