ஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.!!

ரண்தெனிகல நீர்தேக்கம் மற்றும் இராணுவ முகாமிற்கு மேல் பறந்த மர்ம ட்ரோன் கமரா தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 31ஆம் திகதி இரவு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ட்ரோன் இயந்திரம் பறந்தமையினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த இயந்திரத்தை அவதானித்தவுடன் பாதுகாப்பு குழுவொன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆயிரம் அடி உயரத்தில் இந்த ட்ரோன் இயந்திரம் பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.