அதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து.!! 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் பலி..!!

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்தவர் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை பிய்த்துக் கொண்டு நுழைந்து கோழிக் கூட்டின் மீது மோதியுள்ளது.

இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இறந்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் சாரதிக்கு அருகில், மட்காட்டில் உட்கார்ந்து மற்றொருவரும் பயணித்துள்ளனர்.மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் தவறி கீழே விழுந்து சில்லுக்குள் சிக்கியுள்ளார். இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வேலை பிய்த்துக் கொண்டு வீட்டு வளவுக்குள் நுழைந்ததுடன், அங்கிருந்த கோழிக் கூட்டின் மீது மோதி நின்றுள்ளது. இதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றினர். மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் 8ம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (வயது41) என்ற இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதேபோல் சாரதி மற்றும் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், தப்பி ஒடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.