இரவு வேளையில் யாழில் கடத்தப்பட்ட 02 வயதுக் குழந்தை.!! வடமராட்சியில் பரபரப்பு..!!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அல்வாய் வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது.நேற்று(3) இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த கடத்தலில் தந்தை சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.