இன்று அதிகாலை பூமியை நோக்கி வந்த நான்கு விண்கற்கள்.!!மயிரிழையில் தப்பித்தது பூமி..!!

பூமியை நோக்கி 50,000 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்த 4 விண்கற்கள் தொடர்பாக நாசா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த கற்கள் நான்கும் , பூமியை தாக்காது என்றும். இவை பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லும் என்றும் நாசா அறிவித்து இருந்தது.

அதற்கு அமைவாக சற்று முன்னர்(03) அதிகாலை லண்டன் நேரப்படி, குறித்த 4 விண் கற்களும் பூமியை கடந்து சென்றுள்ளது என நாசா மேலும் அறிவித்துள்ளது. விண்ணில் பல கோடி விண் கற்கள் அங்கும் இங்குமாக நடமாடி வருகிறது. பூமி மிகவும் வேகமாக சூரியனை சுற்றி வருவதால், அவற்றில் இருந்து தப்பி வருகிறது.