வேகக்கட்டுப்பாட்டையிழந்த லொறி தடம் புரண்டு கோர விபத்து… ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியான சாரதி..!!

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின், வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்திற்கு இலக்கானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்து கொண்டிருந்த லொறியே விபத்திற்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.