பெண்கள் கோவிலில் பரிகாரம் என நினைத்து செய்யும் மிகப்பெரிய தவறு இது தான்..!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

இன்று பெரும்பாலான கோவில்களில் கொடிமரத்தின் அடியிலும் சிலைகளின் மீதும் உப்பை வாரி வழிபடுகின்றனர், ஏன் என்று தெரியுமா..? இது முற்றிலும் தவறான முறை..சித்தர்கள் உணர்த்திய உண்மையை உணராமல், அவர்கள் கட்டிய கோவில் சிலைகளை அரித்து, அழிப்பது நாம் முட்டாள்தனம் என்பதையே காட்டுகிறது. உப்பின் பிறப்பிடம் கடல். இன்று நிலப்பரப்பாக நாம் வாழும் எவ்விடமும் சில கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்தவைகளே.அவ்வகையில் மண்ணும் மண்ணில் தோன்றும் தாவரங்களும் அவற்றை உண்ணும் புழு, பூச்சிகள், விலங்கு, பறவை, மனிதன் என எல்லாமே உப்பின் வெவ்வேறு வடிவங்கள் என்றே கூற வேண்டும்.உப்பு ஒரு சுவை என்பதை தாண்டி அதிலுள்ள மின்னாற்றலே உடலையும் மூளையையும் இயக்குகிறது. இதை நமக்கு அறிவியலே கூறியுள்ளது.
அடுத்த ஒரு 21 நாட்களுக்கு உப்பில்லாத உணவு எடுத்துகொண்டால், உங்களின் உடல் இயக்கத்திலும், சிந்தனையிலும் உள்ள மின்னாற்றல் குறைந்து போகும். சிடு சிடு வென திரியும் பலர் தணிந்து காணப்படுவார்கள்.நீ உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய், ரோஷம் இருக்கா என்று கேட்பதன் பின் உள்ள அர்த்தம் இப்போது விளங்குகிறதா..?
உப்பால் அரிக்க முடியாத பொருள் எதுவும் இல்லை. உப்பு ரத்தத்தில் அதிகரிப்பதால் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.இதன் மூலம் உடலின் காரத்தன்மையை அதிகப்படுத்தும்போது நோய் நீங்குகிறது..இங்கு காரத்தன்மை என்பது காரச்சுவை என்று எண்ண வேண்டா.. சுக்கு, சீரகம், மிளகு, கடுக்காய் ஆகியவற்றில் காரத்தன்மை அதிகம். அதனாலேயே சித்தர்கள் தம் பெரும்பாலான உணவுகளில் இவற்றை சேர்த்து கொள்ள சொன்னார்கள்

குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் உப்பும் அதனால் உண்டாகும் உணர்சிகளும் ஒரு அளவில் தேவை.‘சம்சார கடல்’ என்று உலக வாழ்வை மறைமுகமாக கடலுடன் ஒப்பிட்டது, இந்த உப்பின் ஆற்றலை உண்மையை மறைமுகமாக உணர்த்தவே,ஞானம் அல்லது மோட்சம் பெற விரும்பும் மனிதர்கள் அவ்வுணர்ச்சிகளை வென்று யோகப்பாதையில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.
இதை கோவிலுக்கு வரும் மக்கள் உணர்ந்து கொள்ளவே இரண்டு மண் கலசங்களில் உப்பும் மிளகும் இட்டு கொடிமரத்தின் அருகில் வைத்து விட சொன்னார்கள் சித்தர்கள், ஆனால் நம்மில் பலரை இதை கொடிகம்பத்தில் கொட்டிவிட்டு வருகிறோம்.சித்தர்கள் கட்டிய கோவில் கொடிமரங்களையும் சிலைகளையும் அரிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.இனியாவது இதை மாற்ற வேண்டும்.