இறந்த பின்பும் யாருக்கு எல்லாம் மறுபிறவி என்பதே கிடையாது எனத் தெரியுமா..?

வாழ்நாளில் ஒருவர் செய்யும் புண்ணியங்களை வைத்து தான் அவருக்கு மறுபிறவி உண்டு என சொல்லப்படுகிறது.அது உண்மை தான். ஒருவர் மறுபிறவி என்ற மோக்ஷம் அடைய பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.எனவே ஒருவர் தனது வாழ்வில் பாவங்கள் அதிகமாக செய்து, அவர்களின் கர்மா பலன்கள் ஏதுமில்லை என்றால் அவர்களுக்கு மறுவிறவி என்ற மோக்ஷம் கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றது.

மறுபிறவி குறித்து நாரதபுராணம் கூறுவது என்ன?மனிதர்கள் ஒருசில செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக தான் இந்த பிறப்பு, இறப்பு எனும் சக்கர சுழற்சி தோன்றுகின்றது.ஆனால் இந்த சுழற்சியில் இருந்து விடுப்பட்டு மறுபிறவி இன்றி மோக்ஷம் அடையலாம் என்று நாரத புராணம் கூறுகிறது.ஏகாதேசி நாளில் கடவுள் விஷ்ணுவை நறுமண மலர்கள் கொண்டு வணங்கினால், தங்களின் பாவங்கள் அனைத்து கழியும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு மற்றும் சிவனை நெய்விளக்கு ஏற்றி வணங்கி வந்தால், அது கங்கையில் குளித்து பாவத்தை கழித்ததற்கு சமமாம்.இதனால் அவர்களுக்கு புண்ணியம் கூடி, அவர்களின் பாவங்கள் கழியும் என்று புராணம் கூறுகிறது.மேலும் துளசி இலைகள் கொண்டு கடவுள் விஷ்ணு மற்றும் தேவியை வணங்கி வந்தால், தங்கள் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.