சமுர்த்திப் பயாளிகளுக்கு முக்கிய செய்தி…. 5,000 ரூபா கிடைக்காவிடின் வீடுகளுக்கே வந்துசேரும்…!!

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்தியுடன் தொடர்புடைய குடும்பங்களுக்கு இதுவரை 5000 ரூபா வட்டியில்லாக் கடன் கிடைத்திருக்காவிடின் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் குறித்த நிதி உரியவர்களின் வீடுகளுக்கே வந்துசேரும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்தியுடன் தொடர்புடைய 20 இலட்சம் குடும்பங்களுக்கு 10,000 ரூபா வட்டியில்லாக் கடனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார். அதன் முதல் கட்டமாக 20 இலட்சம் குடும்பங்களுக்கும் 5,000 ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்தியுடன் தொடர்புடைய குடும்பங்களுக்கு இதுவரை 5000ம் ரூபா கிடைத்திருக்காவிடின், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் குறித்த தொகை வீடுகளுக்கே வந்து பிரதேச சமுர்தி அதிகாரிகளால் வழங்கப்படும். இதுவரை 20 இலட்சம் குடும்பங்களுக்கு 1,52,428,0 ரூபா வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்திற்கான சமுர்தி வங்கியால் 7621 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.