பலரும் அறிந்திராத பழம் பெருமை வாய்ந்த யாழ்ப்பாணக் கோட்டையின் அதிசயிக்க வைக்கும் பெருமைகள்..!

இலங்கைத் தீவின் வடபகுதியின் தலைநகரமாய் இலங்கைத்தீவின் மகுடமாய் விளங்குவது முனையிலுள்ள யாழ்ப்பாணம் ஆகும்.பல ஆலயங்கள், வரலாறுகள் மற்றும் தொன்மை வாய்ந்த பல சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் யாழ்ப்பாணத்தின் தொன்மையினை எடுத்துக்காட்டுவதாக பல இடங்கள் அமைந்துள்ளது.

அந்த வகையில் மன்னராட்சி காலத்தில் யாழ் கோட்டையானது பிரசித்தி பெற்றது. அதன்பின்னர் உள்நாட்டு போரில் சிதைவடைந்தபோதும் எமது புராதனங்களைஎடுத்துக்காட்டும் தொல்லியல் சான்றாக யாழ் கோட்டை அமைந்துள்ளது. ஒல்லாந்தரால் இறுதிவடிவம் கொடுக்கப்பட்ட யாழ் கோட்டை நட்சத்திரவடிவில் அதன் அடித்தளத்தைக் கொண்டுள்ளது.இக்கோட்டையின் தோற்றக்காலத்தை யாழ்ப்பாணத்தின் மீதான பராந்தகச்சோழனின் ஆட்சிக்காலத்துடன் இணைக்கப்படக் கூடியதாகவுள்ளது. கோட்டை அமைந்துள்ள நிலப்பரப்பின் தோம்புப் பெயர் சோழவணிக கணமொன்றுக்குரியதாகப்படுவதிலிருந்து இக்கோட்டையரசனின் தோற்ற காலத்தினை கி.பி.11ம் நூற்றாண்டுக் காலத்துடன் கொள்ள முடியும்.யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது.எனினும், பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது.இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது. ஒல்லாந்தர் காலம்: யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர்.தற்காலம்:1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் மிக நீண்ட கடுமையான போரில் இராணுவத்திடம் இருந்து பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர்.கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது, இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன. யாழ்ப்பாணக் கோட்டையின் இடிபாடுகளுக்குள்ளிலிருந்து ஏராளமான சோழர் காலத்திற்குரிய மட்பாண்டங்கள் சேகரிக்கப்பட்ட வகையிலிருந்து இக்கருத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.போர்த்துக்கேயருடைய யாழ்ப்பாண வருகையுடன் (கி.பி. 1619) சோழர் காலத்துக் களிமண் கோட்டை புதுப்பிக்கப் பெற்று ஒரு சிறிய வடிவத்தினைப் பெற்றுக் கொண்டது.கோட்டையின் மையப்பகுதியில் காணப்படும் சிறிய கத்தோலிக்க தேவாலயம் (ஒ.எல்.ஆர்.சேர்ச்) போத்துக்கேயர் காலத்து யாழ்ப்பாணக் கோட்டையின் மையப்பகுதியாக விளங்கியது.ஒல்லாந்தர் வசம் யாழ்ப்பாணம் கையளிக்கப்பட்டதுடன் (1696) யாழ்ப்பாணக் கோட்டை அகல்விக்கப்பட்டு நட்சத்திரவடிவினைப் பெற்றுக் கொண்டது.யாழ்ப்பாணக் கோட்டை ஒரு தொல்லியல் கருவூலமாகும். தமிழ்க் கல்வெட்டுக்கள் பல அதன் புறச்சுவர்களில் மறைத்து வைத்துக் கட்டப்பட்டுள்ளன.கோட்டைச் சுவர்களிலுள்ளே தொல்லியல் கருவூலங்கள் காணப்படுகின்றன. இதனை முழுமையான ஆய்விற்கு உட்படுத்தும் போது, வரலாற்றுத் தகவல்கள் பல எமக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது.இன்றும் கூட, யாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாழ் கோட்டையினை பார்க்காமல் திரும்புவது இல்லை.