வார இறுதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்..!!

வார இறுதியில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது.எனினும், கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்த அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனினும், பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.