7 வருடங்களுக்கு முன் தாயைக் கொலை செய்த மகனுக்கு நேர்ந்த சோகம்.!!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரொருவர் தீக்காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி நான்காம் குறிச்சி பாவா ஒழுங்கையை சேர்ந்த 28 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.காத்தான்குடி கர்பாலா வீதியில் உள்ள கட்டடத்திற்குள் இந்த நபர் எரியூட்டிக்கொண்டுள்ளதுடன் அதனை கண்ட அயல்வாசிகள் அம்பியூலன்ஸ் வண்டிக்கு அறிவித்து குறித்த நபரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.இதேவேளை அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், 7 வருடங்களுக்கு முன்னர் தமது தாயாரை கொலை செய்த காரணத்தினால், 3 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.