இணையக் காணொளிகளைப் பார்த்து காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் 43 வயதான சுரேஷ் சர்மா என்பவர் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி குசும் சர்மா (வயது 35) என்பவருக்கும், புரன் மஹாவர் வயது 40 என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு இருவராலும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் சேர்ந்து சுரேஷ் சர்மாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக இணையத்தளத்தில் நிறைய வீடியோக்கள் பார்த்து கணவரை எப்படி கொலை செய்யலாம் என சதி திட்டம் போட்டுள்ளனர். சம்பவத்தன்று சுரேஷ் சர்மாவிற்கு போன் செய்த புரன் மஹாவர் உங்கள் மனைவி பற்றிய சில உண்மைகளை கூற வேண்டும்’ எனக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறி உள்ளார். அங்கே வந்த சுரேஷ் சர்மாவை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.சாலையோரமாக சுரேஷ் சர்மாவின் சடலம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அனைவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.அவரது மனைவி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மனைவியை தீவிரமாக விசாரித்ததில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். திருமணத்திற்கு முன்பே புரன் மஹாவருடன் தொடர்பு இருந்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். கணவரை எப்படி கொலை செய்வது என்பது தொடர்பாக பல வீடியோக்கள் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து குசும் சர்மா மற்றும் புரன் மஹாவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.