கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

தற்போது பல பிரதேசங்களில், தோல் நீக்கப்பட்ட கோழியிறைச்சி கிலோ ஒன்றின் சில்லறை விலை 630ஆக உயர்வடைந்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சில இடங்களில் தோல் நீக்கப்பட்ட கோழியிறைச்சி கிலோ ஒன்றின் விலை 650 ரூபா – 700 ரூபாவிற்கு இடையில் விற்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோல் நீக்கப்பட்ட கோழியிறைச்சி கிலோ ஒன்றின் விலை 480 ரூபாவாகும். அது ஒரு கிழமையில் 550 ரூபாய்வரை அதிகரித்தவுடன் அடுத்த வாரத்தில் சில நாட்களில் வேகமாக உயர்வடைந்ததுடன் 630 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் உற்பத்திகள் குறைவடைந்ததால் கோழியிறைச்சி பற்றாகுறை ஏற்பட்டதுடன் இறக்குமதி வரி அதிகரிப்பால் கோழியின் விலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முட்டையின் விலை 20 ரூபாவாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முட்டையின் விலை 13 – 15 ரூபாவாக காணப்பட்டது. கோழி மற்றும் முட்டை விலை வரும் நாட்களில் தொடர்ந்து உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.