இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு..!

இலங்கையில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு வெளியான தகவலின்படி மேலும் 4 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.இதனையடுத்தே தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 07 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் இதுவரை குணமடைந்து வீடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.