இலங்கை நாடாளுமன்றை கலைத்தது தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கிய அதிரடித் தீர்ப்பு..!!

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும், உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.இந்தச் சூழ்நிலையிலேயே இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.