தலைகீழாக விழும் ராஜகோபுரத்தின் நிழல்..!! ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்…அதிசயங்கள் நிறைந்த கோயில்..!! வியப்பில் ஆழ்த்தும் பதிவு..!

ஒரு இடமோ, கட்டிடமோ, நபர்களோ எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே பிரதிபலிப்பதுதான் நிழல். அதனால் தான் ஒரு நபரோடு நெருக்கமாக இருப்பவரைக் கூட இவர், அவரின் நிழல் என்று சொல்லுவோம். ஆனால் இங்கே அந்த நிழலிலேயே ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.கர்நாடகா மாநிலத்தில் சிவன் கோயில் ஒன்றில் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறது.


கர்நாடகத்தின் பெல்லாரி பகுதியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் உள்ளது.இந்த கோயிலை சாளுக்யா, கொய்சலா வம்சத்தினர் கட்டியதாக கூறப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த ஆலயத்தில் ஏராளமான திருப்பணிகள் நடந்து இருக்கிறது.

மொத்தம் 165 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இது எப்படி என்பதுதான் அறிவியலாளர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது. ஒரு பொருளின் நிழல் தலைகீழாக தெரிய வேண்டும் என்றால் நிஜத்துக்கும், நிழலுக்கும் இடையே கண்ணாடி போல் ஏதோ இருக்க வேண்டும். இங்கே அப்படி எதுவுமே இல்லாத நிலையில் இது எப்படி நடக்கிறது என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

கோபுரத்துக்கும், சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு நிழலை தலைகீழாக விழ வைக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து கூறினாலும், இது நிரூபிக்கப்படவில்லை. இந்த கோயிலில் இன்னும் பல ஆச்சர்யங்கள் உள்ளது. கோயில் மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளது. இங்குள்ள மற்றொரு மண்டபத்தின் நடுவே வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்ரா ஆறின் நீர் மடப்பள்ளியை அடைத்து பின்னர் வெளிப்பிரகாரம் வழியே வெளியேறுகிறது.

1565ல் நடந்த படையெடுப்பில் இந்த நகரே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் இன்னும்கூட கம்பீரத்தோடும், ஏராளமான ஆச்சர்யங்களோடும் காட்சியளிக்கிறது.