சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி… இனி இன்சுலின் ஊசி வேண்டாம்..!! விஞ்ஞானிகளே வியந்த இன்சுலின் செடி..!!

நான்கு பேர் ஒரு இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தால் அவர்களில் மூன்று பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாகவே அறியப்பட்ட சர்க்கரை நோய் இன்று ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவரையும் வாட்டி வதைக்கிறது


சர்க்கரை நோய் மருந்து, மாத்திரைகளில் கட்டுப்படாத போது இன்சுலின் போட்டு செயற்கையான முறையில் சர்க்கரையை குறைப்பார்கள்.

அது ஆங்கில அலோபதி மருத்துவத்தின் ஒரு அங்கம். என்ன தான் இன்சுலின் ஊசி மூலம் சர்க்கரையின் அளவு குறைந்தாலும் அலோபதி வகை மருந்தை ஊசி மூலம் செலுத்துவதால் அதுவே ஒரு கட்டத்தில் நம் உடலுக்கு கேடாக முடியும். இந்த நிலையில் தான் இயற்கையான இன்சுலின் செடியை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சிறுநீரகக் கல், இரத்த அழுத்தத்தையும் கூட சரி செய்ய முடியும்.

இந்த இன்சுலின் செடிக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்று பெயர். இதன் 10 இலைகளை எடுத்து தூய்மையாகக் கழுவிக்கொள்ள வேண்டும். அதை சின்ன சின்னதாக நறுக்கி சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். இலையை ஒருமுறை பிளிந்து பார்த்து அது நன்றாக காய்ந்துள்ளதா என அறிந்து கொள்ளலாம். இப்படி நன்றாக காய்ந்த இலைகளை ஒருகாற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைக்கணும். இப்போது ஒரு கப் தண்ணீரை எடுத்து நல்லா கொதிக்க வைக்கணும். கொதித்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் இலைகளை போடணும். இப்போ கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் பிரவுன் நிறத்தில் மாறும்.

இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதேபோல் 5 இன்சுலின் இலைகளை நன்கு காயவைக்கணும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து, அதில் இலைகளை போடணும். இந்த தண்ணீர் பாதியளவு வற்றும் வரை கொதிக்க வைக்கணும். பின்னர் இதை வடிகட்டி ஒரு கப்பில் எடுத்துக்கணும். இதோடு சுவைக்கு கொஞ்சம் தேனும் சேர்த்து இன்சுலின் இலை டீயாகவும் குடிக்கலாம்.

இதில் முக்கியமான ஒரு விசயம் இருக்கு. அது என்னன்னா, ‘’கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்கள் இந்த இலை ஹார்மோர் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால் சாப்பிடக் கூடாது”மற்றவர்கள் பயன்படுத்தலாம்.